Pages

About us and the help we need

About us

Saturday, 22 December 2018

21.12.2018 வள்ளுவர் குடியிருப்பு மக்களுக்கு குடும்ப அட்டையை சிதம்பரம் சார் ஆட்சியர் வழங்கினார்

இன்று 21.12.2018 வள்ளுவர் குடியிருப்பு (சிதம்பரம் கில்லை சி மானம்படி இருளர் குடியிருப்பு) மக்கள் ஒரு வேளை உணவுக்கே மிகவும் கஷ்ட்டப்படும் நிலையில் தன்னார்வளர்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்த அரசு அதிகாரிகளின் முழு முயற்சியின் காரனமாக, வாழ்நாள் முழுவதும் இவர்கள் பசியில்லாமல் சாப்பிட இன்று வள்ளுவர் குடியிருப்பு மக்களுக்கு புதிய குடும்ப அட்டை Ration card சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மஹாஜன் IAS வழங்கினார்

இந்த பணியில் பூராசமி, கார்த்திக் ராஜ் மற்றும் அவர்களது நண்பர்களின் கடலுார் வெள்ளப்பெருக்கு மீட்பு நாட்கள் முதல் இடைவிடாத முயற்சி மனம் நெகிழ வைக்கும் உன்னத செயலாகும்.

இவருடன் சிதம்பரம் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் நந்திதா மற்றும் குடிமைப் பொருள் ஆய்வாளர் நாகேந்திரன் உட்பட நிகழ்வில் கலந்துக் கொண்டனர.

வள்ளுவர் குடியிருப்பு மக்களுக்கு இவர்களின் வாழ்நாளில் முதல் முறையாக வாங்கும் குடும்ப அட்டை இதுவாகும்:pray:🏾:pray:🏾:pray:🏾

மேலும் இவர்களுக்கு முழு ஆதரவையும் உதவியை தொடர்ந்து அளித்து வரும் உதவி பேராசிரியர் பிரவீன் அவர்கள் மற்றும் நிழல்கள் Team நன்பர்களுக்கு, கன்யாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மேடம், அருன் தயாளன் I.A.S. சார் அவர்களுக்கும் வள்ளுவர் குடியிருப்பு மக்கள் சார்பாகவும் அனைத்து தன்னார்வலர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி:pray:🏾:pray:🏾

இந்த மண்ணின் முதல் உரிமையாளர்களுக்கு 71 ஆண்டிற்குபின் குடும்ப அட்டை தரப்படுவது மிகுந்த மன வருத்தமான செய்தி, மேலும் இதுவும் இல்லாமல் எத்தனை குடும்பம் உள்ளதோ! மேலும் தன்னார்வலர்கள் இவர்களுக்கு நில பட்டா கிடைக்கவும் வீடு கிடைக்க வழி செய்யும் பணி மிதம் உள்ளது. இந்த முன்னேற்றம் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தரும் அரும்மருந்தாக அமைந்துள்ளது.:pray:🏾:pray:🏾:pray:🏾

தொடரட்டும் உங்கள் நல்ல செயல்கள்.

Website/Blog: http://vkkillai.blogspot.com/?m=1

Join the casuse at: https://t.me/joinchat/CpDjeEosHmBH0dBz-olUUw




No comments:

Post a Comment